Thursday, 17 November 2016

தாய் தந்தை அன்பு

பெற்றவருக்கு பிள்ளையுமானென்! 
____பெரும் தொல்லையுமானேன்!! 

இல்லை என்றுசொன்னால் 
____இடியென பிடிவாதமானேன்!! 

பள்ளிக்கு செல்லாமல் 
____பாவம் அரிவிலியானென்!! 

எல்லாமறிந்தும் தட்டிக்கொடுத்தீர் 
____எண்ணங்களில் நேர்மையானேன்!! 

கோவிலேனும் குருகுலத்தில் 
____முதல் மாணவனானேன்!! 

கல்லூரியெனும் காதலில் 
____கால் பதித்தேன்!! 

காதல்தோல்வியெனும் கடலில் 
____தன்னிலை மறந்தேன்!! 

கட்டிப்பிடித்து கரையேற்றிய 
____உங்களால் என்னையறிந்தேன்!! 

தன்னையிழந்து என்னை 
____பெற்ற தாய்மையறிந்தேன்!! 

தன்னலம் காணாத 
____என்தந்தையின் நேர்மையறிந்தேன்!! - என் 

தவறில் தாங்கள்கொண்ட 
____வலியை அறிந்தேன்!! 

வலியைய் பொறுத்த 
____வல்லமை அறிந்தேன்!! - அவைகள் 

வல்லமையல்ல என் 
____மேலுள்ள அன்பெனறிந்தேன்!!! 

Tuesday, 15 November 2016

காதல் தோல்வி இல்லையடி

நீ என்னை பிரியும் நேரம்
என் கண்ணில் ஏதோ ஈரம்
என் இதயம் வழித்திடுமோ! ஏனோ
என் இளமை முடிந்திடுமோ?
கவிதை நீயென கண்ணில் கண்டேன்
கண்ணில் கண்டத்தை வார்த்தையில் தொடுத்தேன்
கவிதையே நீ கனவா ? என்
கவிதை உனக்கு கறையா?
என் இதயமோரம் நீ ரோஜாச்செடி
முள்ளைக் கொண்டு எனை கிராதடி
இங்கு இதயம் சிதறுதடி
இரத்தம் மொத்தம் வலியுதடி
இது காதல் தோல்வி இல்லையடி
உனக்கு காதல் ஏனோ தோன்றவில்லையடி
என் காதல் கனவு - இங்கு
வெறும் கானல் நீராய் மாறுதோடி?
விருப்பம் என்பது இயற்கையடி
விருப்பத்தை மறைப்பது தவறுதானடி
விருப்பத்தை விருப்பமாய் சொன்னேன் – நீ
வெறுப்பது நியாயமா ஏனடி?

Wednesday, 14 September 2016

என் காதல்

கனவுகளாய் என் இரவில் 
கவிதைகளாய் என் சொல்லில் 
காகிதமாய் என் அறையில் - காதல் 
கடல்நீராய் என் புவியில்!!! 

மருத்துப்போகுமோ என்னிதயம் காத்திருந்து, 
மதியே! அவளின் மௌனத்தினால்!! 
மரியாதை தந்தாள் என்னன்பிற்கு 
மனதிற்கு மட்டும் வந்துசென்றாள் கனவாக!!! 

ஊர் அறிய வேண்டும் - என் 
உண்மை காதல் என்பது, 
ஊமையானேன் அவளின் சம்மதத்திற்கு, 
உண்மையானேன் என் கனவுகாதலுக்கு...!!! 

Saturday, 10 September 2016

தாயின் அன்பு முத்தம்

கலப்படமில்லா காதல் முத்தம் 
____இலக்கணமில்லா மொழியின் முத்தம் 
கண்ணயரா விழிகள் நித்தம் 
____என்னுயிர்த்தாயின் பார்வை முத்தம்! 

என்னுயிர் உன்னுயிரைக் கொண்டு 
____உன்னுடலில் என்னைக் கொண்டு 
எண்ணங்களில் என்னுருவம் கண்ட 
____மண்ணுலகத் தெய்வத்தின் கனவுமுத்தம்! - அனைவருக்கும் 

விடுமுறை என்பது உண்டு 
____விலகுவதற்கு வாய்ப்பும் உண்டு 
விட்டுக்கொடுக்காமல் உழைப்பாயே எனக்காக - உன் 
____வியர்வையால் குருதி முத்தம்! 

ஊர் வெறுக்கும் தொல்லையானாலும் 
____பேர் கெடுக்கும் பிள்ளையானுலும் 
உணவு சாப்பிட்டாயா? எனக்கேட்க்கும் 
____உன் உச்சப்பாசத்தின் முத்தம்! 

உன்குருதியை உணவாய் தருவாய் 
____உன்னழகில் என்னுடல் தருவாய் 
என் வாழ்க்கை தொடக்கம் தருவாய் - தாயே! 
____உன் அன்பு முத்தத்தில்!!! 

Thursday, 14 May 2015

கடைசி நாள் கல்லூரி

கண்ணில் பட்ட மின்னல் ஒளியாய் 
காலம் இங்கே கரைந்தோடுதே! 

நாம் ஆரம்பித்த நாட்கள் எங்கே 
அதை மனம் தேடுதே! 

பயணமும் தொடங்கியது!! 
இறக்கையும் முளைத்தது!! 

பறக்க மனமில்லையே! – இந்திடத்தை 
துறக்க வலிமைல்லையே!! 
______________வலிமைல்லையே!! 
___என்னிடம் வலிமைல்லையே!!! 

படுத்து உறங்கிய பெஞ்ச் எங்கே! 
உணவருந்திய இடம் எங்கே! 
கடன் சொல்லிய கேண்டீன் எங்கே! 
கதைகள் பேசிய நூலகம் எங்கே! 
காகித பந்தில் கிரிக்கெட் எங்கே! 
ஆட்டம் போட்ட பஸ் எங்கே! 
கொண்டாடிய ஹோச்டேல் எங்கே! 
அன்பான ஆசிரியர் எங்கே! 
தோள் கொடுத்த தோள்கள் எங்கே!! 

என நாட்களை தேடும் கண்கள் இங்கே!! 
இங்கே இங்கே.. இங்கே!!! 

இன்னும் என்ன 
நான் சொல்ல சொல்ல! 
கண்ணில் ஓரம் 
நீரும் ஓட! 

துடைக்க ஆள் இல்லையே!! – என் 
கைகள் போதவில்லையே!!! 
கதைகள் பேச நேரமில்லை! 
காகாபாளாயாமும் தூரமில்லை! 
உலகம் இங்கே சுருங்கிக் கிடக்கு! 
உள்ளங்கையில் செல் போன் இருக்கு! 
கவலையில்லாமல் முன்னே ஓடு! 
நினைவு வந்தால் திரும்பி பாரு! 
கண்ணீரில்லாமல் கல்லூரிக்கு! 

மீண்டும் வருவோம் என்று 
______________ஆறுதல் சொல்லு!! 
______________ஆறுதல் சொல்லு!! 
கனிவோடு நன்றியும் சொல்லு!! 

______________நன்றி சொல்லு! 
_____________________சொல்லு!! 
______________நன்றி சொல்லு!!!